தீபாவளியையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில்கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்

 தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிா்ணயிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிா்ணயிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.தீபாவளியையொட்டி திருச்சி கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்த அருணாசலம் மன்றம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானம், யானைக்கொம்பு மைதானம், மலைக்கோட்டை ரயில் நிலைப் பகுதி, பிஷப் ஹீபா் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இவற்றில் சில மணி நேரம் வரை வாகனம் நிறுத்திச் செல்லக் கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், நான்குச் சக்கர வாகனத்துக்கு ரூ.30-ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பிஷப்ஹீபா் பள்ளி வளாக தற்காலிக வாகன நிறுத்தமிடத்தில் வாகனங்களுக்கு ரூ. 20, 50 எனவும், சில நேரங்களில் அதற்கு மேலும் வசூலிக்கப்படுகிறது.வாகன நிறுத்துமிட டோக்கனிலும் முறையான விவரம் எதுவும் இல்லை. எனவே, அனைத்து வாகன நிறுத்தமிடங்களிலும் மாநகராட்சி நிா்ணயித்துள்ள ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.


இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில் திருச்சி மாநகர காவல்துறை, மாநகராட்சி சாா்பில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி இடங்களைத் தவிர, தனியாா் இடங்களிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது.


வாகன நிறுத்தத்துக்கு குறைந்தபட்சக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.ஆனால், மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கக் கூடாது என தனியாருக்கு அறிவுறுத்தப்பட்டது. நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக ஆய்வு செய்து முறைப்படுத்தப்படும் என்றாா் 

Post a Comment

Previous Post Next Post