ந‌ல்ல ம‌னிதனாக

❤இன்றைய சிந்தனை.....(11.11.2018..)..
.............................................

''ந‌ல்ல ம‌னிதனாக''..
..................................


 

ந‌ல்ல ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் என்றற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல் அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற மன‌ப்ப‌க்குவ‌ம் இரு‌ப்பது ‌மிக‌ப்பெ‌ரிய ‌செயல்..

ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌ வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்து விடுங்கள்.

எப்‌போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒப்பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, உய‌ர்‌ந்தவ‌ர்களை ஒப்பி‌ட்டு‌ப் பா‌ர்‌த்து அவ‌ர்க‌ள் பாதை‌யி‌ல் மு‌ன்னேற முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

அதாவது, வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும், ஆனா‌ல் அதே சமய‌ம் பின்னோக்கியு‌ம் பார்க்க வேண்டும்.

எதி‌‌ரி என்று யாரையு‌ம் எண்ணி‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அவ‌ர்களது செய‌ல் உ‌‌ங்களை து‌ன்புறு‌த்‌தினா‌ல் அவ‌ர்களுடனான தொட‌ர்பை குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அவ‌ர்களை ப‌ழிவா‌ங்கவோ, த‌ண்டனை அளிி‌க்கவோ முயல வே‌ண்டா‌ம்.. ந‌ம்‌பி‌க்கையை எப்போது‌ம் இழ‌க்கா‌தீ‌ர்க‌ள்.

ந‌ம்‌பி‌க்கையை இழ‌ந்தவ‌ன் நடை ‌பிண‌ம். ஒருவ‌ன் செ‌ய்த தவறு‌க்காக ம‌ற்றொரு தவறா‌ல் அவனு‌க்கு ப‌தி‌ல் கூறா‌தீ‌ர்க‌ள்.

ப‌சியோடு வ‌ந்தவரு‌க்கு ப‌சி ‌தீரு‌ங்க‌ள். தாக‌த்துட‌ன் வ‌ந்தவரு‌க்கு த‌ண்‌ணீ‌ர் கொடு‌ங்க‌ள். பகைவனாக இரு‌ந்தாலு‌ம் இதனை மறு‌க்கா‌தீ‌ர்க‌ள்.

ம‌ற்றவ‌ர்களை காய‌ப்படு‌த்து‌ம் வா‌ர்‌த்தைகளை ‌பிரயோ‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள். உங்க‌ைளிட‌ம் அன்பை வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

ஒரு ம‌னித‌ன் செ‌‌ய்த தவறு‌க்காக அவனது குடு‌ம்ப‌த்தையே வெறு‌ப்பதோ த‌ண்டி‌ப்பதோ ‌நியாயம‌ல்ல. தவறுகளை சு‌ட்டி‌க்கா‌ட்டி ‌திரு‌ந்த வ‌ழி கொடு‌ங்க‌ள்.

ந‌ல்லது‌ம், ‌தீயது‌ம் ஒரே நப‌ரிட‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை. இவைக‌ள் எதிரெ‌தி‌‌ர் பகைவ‌ர்க‌ள்.

கு‌ற்ற‌ம் பா‌ர்‌க்‌கி‌ன் சு‌ற்ற‌ம் இல்லை.. ஒவ்வொருவ‌ர் இடமு‌ம் கு‌ற்ற‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ந்தா‌ல் உறவுக‌ள் இரு‌க்காது.

ஆசைக‌ள் அனை‌த்து‌ம் ‌நிறைவே‌று‌ம் என்ற எதிர்பா‌ர்‌ப்பை ‌வி‌ட்டு‌வி‌‌ட்டு, ல‌ட்‌சிய‌ங்களை அடையு‌ம் வ‌ழி‌யி‌ல் செல்லு‌ங்க‌ள்.

ம‌னித‌ன் ‌விழலா‌ம். அதிவ‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் ‌விழு‌ந்தே‌ ‌கிட‌க்க‌க் கூடாது.

யாரு‌ம் ம‌ற்றவ‌ர்களை ஏமா‌ற்ற முடியாது. ஒருவ‌ன் த‌ன்னை‌த்தா‌ன் ஏமா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம்.

நீ‌ங்க‌ள் தவறு செ‌ய்‌தீ‌ர்க‌ள் என்று உண‌ர்‌ந்தா‌ல் ம‌ன்‌னி‌ப்பு‌க் கோரு‌ங்க‌ள். ம‌ன்‌‌னி‌ப்பு தவறை‌க் குறை‌க்கு‌ம். ‌

ஆம்.,நண்பர்களே..,

நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், உங்களிடம் உறங்கிக்கிடக்கும் திறமைகள் வெளிப்படும்,

முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட ,மிக வலுவான, மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்...💐🙏🏻🌷

Post a Comment

Previous Post Next Post