‘தேன்மலை’ ரகசியம் சுற்றுலாவாசிகளை தித்திக்கவைக்கும் தேன்

 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலாதளம். தமிழகத்தில் மலைகள், பசுமையான காடுகள், நதிநீர்களையும் கொண்ட முக்கிய சுற்றுலா தளமாகும்.



ஆனால், சுற்றுலாவாசிகள் தொட்டு சுவைத்துப்பார்க்கும் தேன் சுவைகொண்ட சுற்றுலா தளம் என்றால் நம்பமுடிகிறதா?

நாளொன்றுக்கு ஆயிரம் சுற்றுலா பயணிகள் சராசரியாக இங்கு, வந்து செல்கின்றனர்.
அப்படி என்ன சுவாரசியம் இந்த மலையில் அமைந்துள்ளது என்றால்,

கொல்லிமலையில் இருந்து உருவாகி புளியஞ்சோலை நோக்கி ஓடிவரும் நதிநீர் ஒருபக்கம் அழகை சேர்த்தாலும் மற்றொருபுறம்,

பார்ப்பதற்கே மனதை கிரங்கவைக்கும் இயற்கை வளம் அதைவிட சிறப்பாக இருந்து வருகிறது.

புளியஞ்சோலை வரும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் சுற்றி பார்ப்பதற்கும் மட்டுமே வருகின்றனர்.

ஆனால், எத்தனை பேருக்கு இந்த புளியஞ்சோலையில் உள்ள சிறப்பம்சம் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று பார்த்தால், அது மிகவும் குறைவு.

ஏனென்றால், புளியஞ்சோலையில் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.

அந்த வகையில் சிக்கி முக்கி மலை அதனுடன் தேன்மலை ஒன்றும் இருந்து வருகிறது.

அது என்ன தேன் மலை என்றால், இந்த மழையில் தேனீக்கள் பல்வேறு கூடுகட்டி இருந்து வருகின்றன.

அதோடு, அந்தக் கூட்டில் இருந்து தேன் கசிந்து மலை கற்கள் மேல் விழுந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இதனை காட்டுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகள், அந்தக் பாறைக் கல்லில் படிந்துள்ள தேனை நக்கிப் பார்த்து செல்வார்களாம்.

கொஞ்சம் கூட அதன் சுவை மாறாமல் தேன் தித்திக்குமாம். விவரம் தெரிந்த நபர்கள் காட்டில் பயணம் மேற்கொள்ளும்போது கையில் ப்ரட்டும் எடுத்து சென்று விடுவார்களாம். ஜாமுக்கு பதிலாக தேனை தொட்டு சாப்பிட.

திருச்சி புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் இப்படி ஒரு அதிசய மலைகள் இருப்பது அனைவரையுமே ஆச்சரியப்பட வைக்கிறது. நினைக்கும்போதே தித்திக்கிறதே!

செய்தியாளர்: ஜெ. கென்னடி- திருச்சி

Post a Comment

Previous Post Next Post