மானிய விலையில் விவசாயிகளுக்கு மின்மோட்டார்

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையில் சிறு, குறு விவசாயிகள் நிலத்தடி நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் பழைய திறன் குறைந்த மின்மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டார் மற்றும் விவசாயிகளால் புதியதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்பட உள்ளது.


இதற்கான இத்திட்டத்தில் 3 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 10 குதிரைதிறன் வரையுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.10,000 அல்லது மின்மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் பழைய திறன் குறைந்த மின்மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டார்கள் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு அவசியம். ஆற்றல் குறியீடு (Energy Index) 0.75-க்கு அதிகமாக உள்ள பழைய மின்மோட்டார்களுக்கு மட்டுமே மானிய விலையில் புதிய மின்மோட்டார்கள் வழங்கப்படும்.

பழைய டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக புதிய மின்மோட்டார்கள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மின் இணைப்பினை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பெற்றுக் கொள்ள வேண்டும்.


 விவசாயிகள் சொந்தமாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு புதிய மின்மோட்டார் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் 10 குதிரைதிறன் வரையிலான பழைய மோனோ பிளாக் அல்லது நீர்மூழ்கி மின்மோட்டார்களுக்கு பதிலாக அதற்கு இணையான அல்லது அதைவிட குறைந்த குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


தலைமைப் பொறியாளர்(வே.பொ.), சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான மாடல்களை விவசாயிகள் தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

 விருப்பமுள்ள விவசாயிகள்

திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வைய்யம்பட்டி ஒன்றிய பகுதிகளை சார்ந்த விவசாயிகள் எண். 2, ஜெயில் கார்னர், திருச்சி-620 020 என்ற முகவரியிலுள்ள உதவி செயற் பொறியாளர், (கைப்பேசி எண். 94436 75359) வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலும்,

முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் எண்-18 கண்ணதாசன் தெரு, முசிறி-621 211 என்ற முகவரியிலுள்ள உதவி செயற்பொறியாளர், (கைப்பேசி எண். 9865547628) வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலும்,

லால்குடி, புள்ளம்பாடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் கணபதி நகர், வடக்கு விஸ்தரிப்பு, தாளக்குடி அஞ்சல், லால்குடி 621 216 என்ற முகவரியிலுள்ள உதவி செயற்பொறியாளர், (கைப்பேசி எண். 9842435242) வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலும்

உரிய நில உரிமை ஆவணங்கள், சிறு அல்லது குறு விவசாயி சான்று, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு மானிய விலையில் மின்மோட்டார்கள் பெறகேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post