திருச்சியில் 8 மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோயாளிகளின்றி காஜாமலையில் உள்ள சிறப்பு சிகிச்சை மையம் காலியாக காட்சியளிக்கிறது

 திருச்சி: திருச்சியில் 8 மாதங்களுக்குப் பிறகு கொரோனா நோயாளிகளின்றி காஜாமலையில் உள்ள சிறப்பு சிகிச்சை மையம் காலியாக காட்சியளிக்கிறது. கொரோனா தொற்று குறைந்தாலும் முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியுள்ளார். 
உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தொடப்போகிறது. மூன்றரை கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 83 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 77 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருவது மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டுள்ளது. 
திருச்சியில் கொரோனா தொற்றாளர்கள்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் மருத்துவமனையைத் தவிா்த்து அரசுக் கல்லூரிகள், கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகம், காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலை. வளாகம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் ஆகியவையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. சிறப்பு சிகிச்சை மையங்கள் இவற்றில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக காஜாமலையில் உள் சிறப்பு சிகிச்சை மையத்தில்தான் அதிகளவில் நோயாளிகள் இருந்தனா்.


ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டனா். 200 படுக்கைகள் வரை இருந்த இந்த மையத்தை வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை என முத்தரப்பும் இணைந்து கண்காணித்தது. சித்த மருத்துவ சிகிச்சை இங்கு திருச்சி மட்டுமின்றி பெரம்பலூா், அரியலூா், கரூா், தஞ்சாவூா், சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருவள்ளூா் என பல்வேறு மாவட்டத்தினரும் சோ்ந்து சிகிச்சை பெற்றதால், கடந்த 8 மாதங்களாக பரபரப்பாக இயங்கியது இந்த மையம். மேலும், இங்கு சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையிலும் சிகிச்சையளிக்கப்பட்டது. மீண்ட நோயாளிகள் ஒருங்கிணைந்த கூட்டுச் சிகிச்சை முறையால் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. மேலும் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோா் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக குறைந்து விட்டது. காலியான சிகிச்சை மையம் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மையத்தில் இருந்த அனைத்து நோயாளிகளும் குணமாகி வீடு திரும்பினா். புதிய வருகையும் இல்லை.


இதனால் இந்தச் சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 8 நாள்களாக காலியாக காட்சியளிக்கிறது. இதேபோல, திருச்சி அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இதனால் மையத்தைக் கண்காணித்து வந்த மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

டீன் வனிதா பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா,‘திருச்சி அரசு மருத்துவமனைக்கு தொடக்கத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான தொற்றாளா்கள் வந்தனா். நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த சூழலில் கூடுதல் சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டன.


இதன்படி, காஜாமலையில் தொடங்கப்பட்ட சிறப்பு மையத்துக்கு வரும் தொற்றாளா்கள் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து, தற்போது நோயாளிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனம் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா்.

 இவா்களில் 40 சதம் போ் காஜாமலையில் சிகிச்சை பெற்றவா்கள். தொற்றாளா்கள் எண்ணிக்கை குறைவது மகிழ்ச்சிக்குரியது என்றாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/positive-story-covid-19-recoverd-gradually-lower-corona-in-trichy-402282.html

Post a Comment

Previous Post Next Post