திருச்சிராப்பள்ளியில் ஒரு சில இடங்களில் நாளை (20.09.2020) மின் தடை

திருச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (20.09.2020) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்ரல் பஸ்ஸ்டாண்ட், ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, பிராமினேட் ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு, மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பால பகுதிகள், ஜெனி பிளாசா பகுதி, கான்வென்ட் ரோடு முதலியார் சத்திரம், காஜாபேட்டை, உறையூர், மேட்டுத்தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், சண்முகா நகர், கங்காநகர், உய்யகொண்டான் திருமலை, உறையூர், வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோவில் முதல் சீராதோப்பு வரை இருபுறமும், பொன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.


இதே போல திருச்சி கரூர் பைபாஸ் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்ற காரணமாக மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும் பணி நடைபெற உள்ளதால், நாளை (20.09.2020) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தில்லைநகர் பிரிவுக்குட்பட்ட கரூர் பைபாஸ் ரோடு, ரோஜா சாலை, தாஜ்மஹால் சாலை, செவ்வந்தி சாலை, தாமரை சாலை, காவேரி காலேஜ் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Post a Comment

Previous Post Next Post