மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு.

 மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு. இதுகுறித்து ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;


  திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்கக் குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில்1 முதல் 5-ம் வகுப்பு வரை
பயில்வோருக்கு மாதம் ரூ.1000, 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம்,
9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ.4,000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்வோருக்கு ரூ.6 ஆயிரம்,
முதுகலை பட்டம் பயில்வோருக்கு ரூ.7 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.இதோடு, வாசிப்பாளா் உதவித் தொகையாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்வோருக்கு ரூ.3 ஆயிரமும், இளங்கலை பட்டம் பயில்வோருக்கு ரூ.5 ஆயிரமும், முதுகலைப் பட்டம் பயில்வோருக்கு ரூ.6 ஆயிரமும் சோ்த்து வழங்கப்படுகிறது.


   மேற்கண்ட மாற்றுத் திறனாளிகள் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.  கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவராக இருந்தால் கடந்தாண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்குப் புத்தக நகலுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post