உலக பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி திருச்சியில் தொடங்கியது

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் உலக பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.



இந்த கண்காட்சியில் பண்டைக்காலத்தில் உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட வித விதமான நாணயங்கள், பணத்தாள்கள் இடம் பெற்று உள்ளன. நமது நாட்டின் ரூபாய் நோட்டில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட பழைய நாணயங்கள், தற்போது பயன்பாட்டில் உள்ள பணத்தாள்கள் வரை இடம் பெற்று உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, அர்ஜெண்டினா, மலேசியா, சிங்கப்பூர், பங்களா தேஷ், பிரேசில், சோமாலியா, நைஜீரியா, ஜிம்பாப்வே, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகள் மற்றும் மிக சிறிய குட்டி நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பணத்தாள்களும் இடம் பெற்று உள்ளன.

இந்த கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post