திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா

 திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வருடந்தோறும் இத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு நடைபெறும் திருவிழாவில் இன்று (மார்ச் 8) அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரோட்ட வைபவம் மற்றும் சுத்த பூஜை நடந்தது.


இதில் குழுமாயி அம்மன் கோயில் மருளாளி சுத்த பூஜையான, பக்தர்களின் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் செய்யும் பாத பூஜை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருளாசி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நாளை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் நிகழ்ச்சி நாளை (மார்ச் 9) காலை நடைபெறுகிறது.

Post a Comment

Previous Post Next Post