திருச்சி: போலீஸ் ஸ்டேசனில் புகுந்து திமுகவினர் தாக்கும் வீடியோ

 திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்க உள்ள திட்ட பணிகளையும், முடிவுற்ற திட்ட பணிகளையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று தொடங்கி வைத்தார்.
 இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் எஸ். பி. ஐ. காலணியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம். பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவரது வீடு உள் நியூ ராஜா காலணி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர். ஆகையால் அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர்.

இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம். பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய போலீசார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 12 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் திமுக எம். பி. வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை பெரும் ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கும், திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்க்கும் இடையே மோதல்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு காரை மறைத்து கருப்பு கொடி காட்ட முயன்றதாக திருச்சி சிவாவின் ஆதரவாளர் 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் , திருச்சி சிவா அவரின் இல்லத்தில் நின்று கொண்டு இருந்த கார் கண்ணாடி உடைத்தும் இருசக்கர வாகனத்தை உடைத்தும் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணைக்காக இருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, காவல் நிலையத்திற்குள் புகுந்து அமைச்சசர் கே. என். நேருவின் ஆதரவாளர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சரின் ஆதரவாளர் காஜாமலை விஜய் மற்றும் இன்னும் சிலர் தாக்கியுள்ளனர். காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபடும் அமைச்சர் நேருவின் ஆதரவாளை தடுக்க முயன்றபோது பெண் காவலர் சாந்தி காயம் அடைந்தார். மேலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி தெற்கு DC ஸ்ரீதேவி அவர்கள் கூறுகையில், இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்தவிதமான FIR பதியவில்லை என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post