ஆடி மாத ஸ்பெஷல் கேழ்வரகு கூழ்

 தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். இந்த கூழ் கேழ்வரகு, கம்பு போன்றவற்றில்தான் செய்யப்படுகிறது.  முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இந்த கூழ் இருந்தது. நமது முன்னோர்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டே வந்தனர். அதனால்தான் அவர்களுக்கு சர்க்கரைநோய், இரத்த கொதிப்பு போன்ற நீண்டநாள் வியாதிகள் வரவில்லை.  நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர். இப்போது ஆடி மாத கூழ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.


முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இந்த கூழ் இருந்தது. நமது முன்னோர்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டே வந்தனர். அதனால்தான் அவர்களுக்கு சர்க்கரைநோய், இரத்த கொதிப்பு போன்ற நீண்டநாள் வியாதிகள் வரவில்லை

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கோப்பை
பச்சரிசி - கால் கோப்பை
தண்ணீர் - 2 கோப்பை
தயிர் - 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 1
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சரிசி அல்லது சிறுதானிய அரிசியை வேக வைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த அரிசியில் முதல்நாளே கரைத்து நன்கு புளிக்க வைத்த கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதனை அடிப்பிடிக்க விடாது நன்றாக கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இதனையும் முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடியாக  நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து குடிக்கலாம். இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்குழம்பு, கறி குழம்பு, கருவாட்டு குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

ஆடி மாத ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் ஆடி மாத ஸ்பெஷல் கேழ்வரகு கூழ் Reviewed by IQbal on July 26, 2021 Rating: 5

No comments:

ads
Powered by Blogger.